மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, குருநாகல், நுவரெலியா, மாத்தளை , இரத்தினபுரி, மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு நாளை மாலை 4 மணி வரை அபாய மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.