கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையத்தில் கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றின் மொத்த விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் நுவரெலியா உருளைக்கிழங்கு 220 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்திய பெரியவெங்காயம் 125 முதல் 130 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் சிறிய வெங்காயத்தின் மொத்த விலை 280 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 360 ரூபாய் முதல் 370 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலுக்கு அமைய ஒரு கிலோகிராம் கரட் 110 ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் லீக்ஸ் 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.