அனுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி இயங்கும் ரஜரட்ட குயின் தொடருந்து, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அனுராதபுரத்தின் தஹையகம பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.15 மணிக்கு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் தொடருந்து இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
பின்னர், தலைமன்னாரிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தொடருந்துக்கு பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.