வெறுமனே 30 ஊழியர்களுடன் டெலிகிராம் 30 பில்லியன் டொலர் பேரரசை கட்டமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகவும் திறமையான தொழில்நுட்ப நிறுவனமாக டெலிகிராம் திகழ்கிறது.
தனியுரிமை மற்றும் சுதந்திரத்தில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையால் இந்த இலக்கை அடைய முடிந்ததாக டெலிகிராம் ஸ்தாபகர் குறிப்பிட்டார்.
இணைய சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதிகளில் பெரிதும் உதவியதாக இந்த டெலிகிராம் திகழ்கிறது.
தணிக்கை மற்றும் அரசாங்க கண்காணிப்பு வளர்ந்து வரும் கவலைகளைக் கொண்டிருந்த ஈரான், ரஷ்யா, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள், விரைவில் டெலிகிராமின் கோட்டைகளாக மாறின.
பல வருடங்களாக, டெலிகிராம் வெறும் செய்தியிடல் செயலியாக மட்டுமல்லாமல், டிஜிட்டல் சுதந்திரம் மற்றும் எதிர்ப்பின் அடையாளமாகவும் மாறியது.
மெட்டா அல்லது கூகுள் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தியிருந்தாலும், டெலிகிராமின் வெற்றி சுமார் 30 ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவில் தங்கியுள்ளது.
இந்தக் குழு அலுவலகம் இன்றி வீடுகளிலேயே இருந்து பணியாற்றுவதாகவும் அதன் ஸ்தாபகர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு 400 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த டெலிகிராம் 2022 ஆம் ஆண்டு 700 மில்லியன் பயனர்களைத் தன்வசப்படுத்தியது.
அதேபோன்று 2023 இல் 800 மில்லியன் பயனர்களும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1 பில்லியனைத் தாண்டியது டெலிகிராமின் பயனர்கள் எண்ணிக்கை. mo