இதனால், அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் மருந்துகளைப் பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து வருட காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாளர்களின் எண்ணிக்கை புதுப்பிக்கப்படாததே, மருந்தாளர்களின் பற்றாக்குறைக்குக் காரணம் என சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவக் கல்வியை நிறைவு செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சுகாதார அமைச்சிடம் முறையான அமைப்பு இல்லை என்பதுடன், மூன்று ஆண்டுகளாக எந்தப் பட்டதாரிகளும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அரசு மருந்தாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.