தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஆங்கில ஊடகமொன்றுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசாங்கம் அரிசி, மரக்கறிகள், சீனி, பருப்பு, மற்றும் மா போன்ற அத்தியாவசியப் பொருட்களை அடையாளம் கண்டு, பண்டிகைக் காலம் முழுவதும் அவற்றின் விலைகள் நிலையாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கூறுகையில், “ஏற்கனவே குறித்த பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பண்டிகைக் காலத்திற்காக வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு எந்தத் திட்டத்தையும் வைத்திருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் உடனடியாக திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.