வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் இந்த கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படுகிறது. சந்தேகநபர் மஹரகம நாவின்ன பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வெலிகம சம்பவம் – மேலும் 2 சந்தேகநபர்கள் கைதுவெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் மாத்தறையில் வைத்து கைது செய்யபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முன்னதாக சம்பவம் தொடர்பில் காலி – ஹியாரே பகுதியில் ஒருவரும் அநுராதபுர கொக்கிராவ பகுதியில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.