ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் 1,845,164 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இதற்கிடையில், நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர சுற்றுலா தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் துறையில் வசதிகளை மேம்படுத்த ஒரு முறையான திட்டத்தை துரிதமாகத் தயாரிக்க வேண்டும் என்று அதன் தலைவர் சமீர சேனக டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.