ஹட்டன் – டிக்கோயா நகர பகுதியில் முச்சக்கரவண்டி வாடகைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முறைபாடளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் கட்டண மானிகளை பொருத்துவதற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காலத்தில் அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இதுவரை மாற்றமின்றி தொடர்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர சபை தவிசாளர் அசோக கருணாரத்தன இதன்போது தெரிவித்தார்.
இதன் காரணமாகவே, போக்குவரத்துக்கு முச்சக்கரவண்டிகளிலும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்படும் கட்டண அனைத்து மானிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஹட்டன் டிக்கோயா பகுதியில் மிகவும் செங்குத்தான மற்றும் குன்றும் குழியுமாக வீதிகள் காணப்படுவதனால், அதற்கு ஏற்ப நியாயமான விலை நிர்ணயிக்கப்பட்டு கட்டண மானிகளைப் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு உடன்படுவதாக வாடகைக்குப் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளின் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.