2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை இடைநிறுத்தப்பட்டது.

பின்னர், லடாக் எல்லைப் பிரச்சினை காரணமாக நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் எழுந்தன.

இந்தநிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை விரைவில் ஆரம்பமாகும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்தது.

அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமானச் சேவை நேற்று(26) ஆரம்பமாகியது.

மேலும் ஷாங்காய் – டெல்லி இடையேயான விமானச் சேவை நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.