நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.