பெரிய வெங்காயத்திற்கான விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என வடமத்திய மாகாண விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போது பல ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் உரிய விலை இன்றி பழுதாகும் நிலையில் உள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட விலையின்றி ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் தமக்கு பயிரிட்ட வெங்காயத்தை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. தமக்கு நட்டம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பெரிய வெங்காயத்திற்கான உரிய விலையை அறிவிக்குமாறு குறித்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.