இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று (01) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிப்பாயின் உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், இது உயிர் மாய்ப்பாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் குருநாகல், மந்துராகொட, கொட்டுஹேனையைச் சேர்ந்த 30 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகத் திருகோணமலை தலைமையக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை