யட்டியாந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபோருவ தோட்டத்தில் அமைந்திருக்கும் இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.