நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.
1. நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.
2. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
3. உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும் .
4. 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
5. வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.
6. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
7. அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
8. நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
9. 2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும்
கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
10. 2025 ஆம் ஆண்டு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
11. 2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.
12. குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்.
மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.
13. நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருளாதார பிரதிபலன்கள் சமமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் முக்கிய நோக்கமாகும்.
14. ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.
15. 2025 ஆம் ஆண்டு 430 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டுள்ளது.
16. எவரும் கடனை செலுத்துவது தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை.
17. 2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
18. பொய்யான பரப்புரைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.
19. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தேசிய கடன் சேவை 760 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
20. 2028 ஆம் ஆண்டிலும் நாங்களே ஆட்சியில் இருப்போம் நாங்களே கடனை செலுத்துவோம்
21. 2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
22. கிராமிய வறுமையை நீக்குவதற்கு தேசிய வருமானத்தின் பிரதிபலன்களை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம்.