தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வினாடிக்கு 4340 கன அடி நீர் கொள்ளளவு, கலா ஓயாவில் வெளியேற்றப்படும் என்று இராஜாங்கனைக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, கலா ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.