உயிரிழந்த சிறுவன் களுத்துறை, வெட்டுமகட பகுதியைச் சேர்ந்த முகமது மிஹிராஜ் யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீதியைக் கடக்கும்போது காலியில் இருந்து வந்த பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலத்த காயமடைந்த சிறுவன் களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இன்று (08) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்