நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணினிகள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழமையான முறைமைகள் மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட அரச சேவையை உருவாக்கும் தற்போதைய முயற்சிகளுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகப் பொறிமுறைகளை நவீனமயப்படுத்துவதற்கு 369 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை சினிமா