பங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் பங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா