பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள திட்டத்தின்படி, புலம்பெயர்தல் நிலை இரத்து செய்யப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும்கூட இனி நாடு கடத்தப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏதிலி நிலை நிறைவடைந்த பின்பும், பிரித்தானியாவில் குழந்தை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பிரித்தானியாவில் குழந்தை பிறந்ததைக் காரணம் காட்டி, பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க முயல்வோரைத் தடுப்பதற்காகவே இப்படியொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிள்ளைகளைக் காரணம் காட்டி பிரித்தானியாவின் புகலிட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.