மனித பயன்பாட்டிற்காக ரூ. 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கொள்முதல் செயல்முறைக்காகச் சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் விதந்துரைக்கமைய மேற்குறிப்பிட்ட ஒப்பந்தத்தை விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள குறைந்த விலைமனுதாரரான Citihealth imports (Pvt) Ltd (Manufacturer : Serum Institute of India Pvt Ltd, India) இற்கு 360 மில்லியன் ரூபாய் தொகைக்கு (பெறுமதிசேர் வரியில்லாமல்) வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்தடுப்பூசிகள் இலங்கையில் ரேபிஸ் நோயைத் தடுப்பதற்கும், இந்நோய்க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளன.

இலங்கை சினிமா