டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் வானூர்தி ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது.

மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 வானூர்தியே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குறித்த வானூர்தியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் குறித்த நிவாரணப் பொருட்களை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளார்.

இலங்கை சினிமா