ஹட்டன், பொகவந்தலாவ பகுதியிலுள்ள உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் ‘பொன்னாவரை மலர்கள்’ பூத்து குலுங்குவதால் தேயிலைத் தோட்டம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்நியவர்கள் நாட்டை ஆட்சி செய்யும் போது தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நிழல் தருவதற்காகவும் மண் அரிப்பைத் தடுக்கவும் பொன்னாவரை பூ மரங்களை நட்டதாகத் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் மஞ்சள் நிற பொன்னாவரை மரங்கள் தற்போது அதிகளவில் பூத்துக் குலுங்குவதாகவும், அந்த பகுதியில் பொன்னாவரை பூக்களின் நறுமணமாக இருப்பதாகவும், பூக்களின் தேனைப் பருக தேனீக்கள் வருவதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.