இளையராஜா இசையில் உருவான அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்ஷ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது X வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,
”இலங்கை தமிழ் இளைஞர்களின் முயற்சியில் உருவாகி, இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒலிக்கும் “அந்தோனி” திரைப்படம், எமது நாட்டு கலைக்கொள்கையை உலகுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான படைப்பாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இளம் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களின் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். மேலும், இந்த திரைப்படம் வெற்றிப் பெற்று உலக தமிழர்களின் மனதில் இடம் பிடிக்கட்டும்!” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
