Author: admin

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

சீரற்ற வானிலையால் இலங்கையின் 05 மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தகவலின்படி, கொழும்பு, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொது…

சூரியபுர சதுப்பு நிலத்தில் சிக்கிய காட்டு யானை இரண்டு நாள்களுக்குப் பின் மீட்பு!

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனரஞ்சன குலத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்த ஒரு காட்டு யானையை, வனவிலங்கு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரும் முயற்சியின் பின்னர் மீட்டெடுத்துள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் மாடு மேய்க்கச்…

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

ஏர் இந்தியா விமான விபத்து; பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வழக்குப் பதிவு

ஜூன் மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள்…

நாளை சுற்றுப்பாதையில் ஏவப்படவுள்ள இலங்கையின் மூன்றாவது செயற்கைக்கோள்!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் உருவாக்கப்பட்ட இலங்கையின் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் நாளை (19) சுற்றுப்பாதையில் ஏவப்பட உள்ளதாக மொரட்டுவையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ‘BIRDS-X Dragonfly’ என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆகஸ்ட்…

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் (Srilanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல்…

‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 முதல் திரையரங்குகளில்

ஐபிசி தமிழ் குழுமம் பெருமையுடன் வழங்கும் ‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழுமையாக உள்ளூர் கலைஞர்களின் அதீத நடிப்புத்திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்ததாக அமைகிறது. இந்த திரைப்படம் சுவீடன் நாட்டின்…

அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டு

இளையராஜா இசையில் உருவான அந்தோனி திரைப்பட குழுவினருக்கு நாமல் ராஜபக்‌ஷ பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ”இலங்கை தமிழ் இளைஞர்களின் முயற்சியில் உருவாகி, இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒலிக்கும் “அந்தோனி” திரைப்படம்,…

தமிழகத்தின் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவம்

வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனமாக திகழும் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவமும் புத்தக விற்பனை கண்காட்சியும் கடந்த வாரம் நடைபெற்றன. பிரதம விருந்தினராக தென்னிந்திய சின்னத்திரை தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம் அத்தோடு…