Author: biruntha biruntha

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் போராட்டம்!

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற போது, அவரது வருகையை கண்டித்து பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெம்ப்லி பகுதியில் உள்ள அல்பர்டன் உயர்தர பாடசாலையில்,…

மெத்தை தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறையின் ஹிரான பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த மொரட்டுவ மாநகரசபைக்குச் சொந்தமான 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேர அஞ்சல் தொடருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகளின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேர தொடருந்து போக்குவரத்தின் போது, காட்டு யானைகள் அடிக்கடி மோதுகின்றன. எனினும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு…

43000 பேருக்கு அஸ்வெசும பணம் இல்லை!

அஸ்வெசும’ (Aswesuma) நிவாரணத் திட்டத்திற்குத் தகுதி பெற்றிருந்தும், வங்கிக் கணக்கு இல்லாத ஒரே காரணத்தினால் 43,703 பயனாளிகள் கடந்த 2024ஆம் ஆண்டில் தமக்குரிய பணத்தைப் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நலன்புரி நன்மைகள் சபை தொடர்பான 2024ஆம் ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையிலேயே…

பரீட்சை வினாத்தாள் கசிவு: CID இல் முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.பொருளியல் வினாத்தாள்…

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை!

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12ஆவது போஸ்ட் பகுதியில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்படுகிறது. நேற்று (22) மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஆவார்.…

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

நாட்டில் கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய நீர் நிலைகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்…

மரக்கறிகளின் விலையில் ஏற்றத்தாழ்வு

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மரக்கறிகளின் விலையில் சற்று ஏற்றத்தாழ்வு பதிவாகியுள்ளன. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் அறிக்கையின் படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 600 ரூபாய் முதல் 650 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் தக்காளி 300 ரூபாய் முதல் 400…

கடற்றொழில் சமூகத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டம்

கடற்றொழில் சமூகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. கொழும்பில் உள்ள தாமரை தடாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டியதும் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்குவார்கள். கடற்றொழிலாளர்…

முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு!

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே…

இலங்கை சினிமா