Author: biruntha biruntha

இந்திய பிரதமரை சந்தித்த ஹரிணி

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.கல்வி, பெண்கள் அதிகாரம், புத்தாக்கம், அபிவிருத்தி ஒத்துழைப்பு,…

கட்டுநாயக்கவில் இருந்து பயணிக்கும் விமானங்களின் நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.…

இஷாரா செவ்வந்தி கூறிய திடுக்கிடும் தகவல்!

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.…

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர்…

நான்கு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள்…

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதற்கான காரணம் கண்டுபிடிப்பு

மோசமான பொறியியல் நிலைமை காரணமாக டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைப் பார்வையிட சென்றபோது, 2023 ஜூன் மாதம் வடக்கு அட்லாண்டிக் கடலில் குறித்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும்…

மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட்டு வழங்க திட்டம்

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி உரிமங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு வழங்க எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில்…

சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவு

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்களின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 பட்டியலில் இந்தியா 85வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 80வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை ஐந்து இடங்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க…

பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்டமை அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே என பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன்…