Author: Mithu Mithu

சட்டத்திற்கு முரணாக இரத்தினக்கல் அகழ்வு- நால்வர் கைது

பலாங்கொடை பின்னவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளவ கங்கையில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதாகியவர்களிடம் இருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நால்வரும் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில்…

முட்டையை விலை குறைப்புக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு

ஒரு முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக அறியமுடிகிறது. சந்தையில் முட்டை விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும், நுகர்வோரும் முட்டையை…

இலங்கையில் மருந்துகள் பற்றாக்குறை

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அந்தக்…

கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – யாழில் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில்…

22 குழந்தைகளை காவு கொண்ட – இருமல் மருந்து நிறுவனம்

இந்தியாவில் 22 குழந்தைகளைப் பலி கொண்ட இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இதன்படி…

சடுதியாக அதிகரித்த எலுமிச்சை விலை

சந்தையில் எலுமிச்சையின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை ரூ3,000ற்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக 200 ரூபாய் முதல் 300க்கும் இடைப்பட்ட விலையில் விற்கப்பட்ட 1 கிலோகிராம் எலுமிச்சையின் விலை பல…

வெடிகுண்டு அச்சுறுத்தல் : சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் வீட்டடில்

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோவில்கள், விமான நிலையங்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் இல்லங்கள், முன்னணி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற…

சீன நிறுவனத்தின் காற்றாலை 17 ஆயிரம் கோடியில்!

சீன எரிசக்தி நிறுவனமானது, ஸ்கொட்லாந்தில் மிகப்பெரிய காற்றாலையை அமைப்பது தொடர்பாக நடத்தி வந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தப் பேச்சுவார்த்தைக்கு தற்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ரூ.17 ஆயிரம்…

முட்டை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் சங்கம் நட்ட அச்சத்தில்!

தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கமைய முட்டைகளை விற்பனை செய்வது சாத்தியமில்லை என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று முதல் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.…

யாழில் சோகம் : வயோதிபப் பெண் கிணற்றில் வீழ்ந்து பலி!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து, 69 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பெண் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு முயற்சித்தவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் மீதான மரண விசாரணைகளை…