Author: mithu mithu

புதிய போக்குவரத்து சேவை நடைமுறைக்கு!

கண்டி மற்றும் குருணாகல் ஆகிய நகரங்களிலிருந்து கொழும்புக்கு வேலை நிமித்தமாகப் பயணிப்பவர்கள் புகையிரத பருவ சீட்டுகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாற்று ஏற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (…

பொருளாதார முடிவுகளுக்கு அடிப்படை “துல்லியமான தரவு” : ஜனாதிபதி தெரிவிப்பு

பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். எனவே துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். மாத்தளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி, இந்த…

இலங்கையில் உள்ள அனைவருக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை!

சூறாவளி புயல் “தித்வா” (Ditwah) தற்போது வடக்கு – வடமேல் திசையில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை முதல் நாளை வரை மிகக் கனமழை, பலத்த காற்று மற்றும் ஆபத்தான வானிலை நிலைமை ஏற்பட உள்ளது. வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய,…

வெள்ளநீரில் விளையாடுவதை தவிர்க்கவும் – எச்சரிக்கை

நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவற்றை அண்மித்த பகுதிகளில் விளையாடுவதை தவிர்க்குமாறு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது, வெள்ளநீரில் விளையாடுபவர்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வருகின்றன. இது உயிராபத்தான செயல் என்பதால் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை- மக்களை பாதுகாப்பான இடம் செல்லுமாறு அறிவுறுத்தல்!

மகாவலி ஆற்றின் கீழ்ப்புறப் பள்ளத்தாக்கு பகுதிகளில் ‘அதி வெள்ள அபாய எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (29) பிற்பகல் 12:30 அளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும்…

இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்கான நிதியை செலவிடுவதற்கு புதிய சுற்றறிக்கை வெளியிடுமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல்

நிதியை செலவிடுவதற்கு தடையாக இருப்பதைத் தடுக்க உடனடியாக ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும், இடம்பெயர்ந்த மக்களுக்காக பராமரிக்கப்படும் முகாம்களின் நிர்வாகப் பொறுப்பை இராணுவத்திடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார அறிவுறுத்தியுள்ளார். அனர்த்த நிவாரணங்களுக்காக தற்போது 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2025 வரவுசெலவுத்…

எச்சரிக்கை! ஜா-எல பாலம் உடையும் அபாயம்.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்கலை, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு உறுதி : அச்சம் வேண்டாம்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்…

சுகாதார துறைக்கு அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு இன்று (28) முதல் டிசம்பர் 4 ஆம் திகதிவரை ஒரு வார காலத்துக்கு சுகாதாரத் துறைக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை சுகாதார…

சில முக்கிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் : ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம், மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்களுக்கான பொது போக்குவரத்து,…

இலங்கை சினிமா