Author: mithu mithu

நாவலப்பிட்டியில் மண்மேடு சரிந்ததில் மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பழைய பகையிரத முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாதக் குழந்தை என நாவலப்பிட்டி பொலிஸார்…

உயிர் காப்பு பணிகளுக்கு தொடர்புகொள்ள விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

உயிர் காப்புப் பணிகளுக்கு உதவி பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடற்படைப் பிரிவின் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விரைந்து குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை கடற்படைப் பிரிவு, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச : 071-8591868

கொழும்பை அண்மித்த மக்களை பாதுகாக்க ஏற்பாடு

கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர். பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்ட அவசர அனர்த்த நிலைமைகளுக்கான துரித அழைப்பு இலக்கங்கள்

அபாய நிவாரண பெறுவதற்கான அழையுங்கள் அபாய மேலாண்மை மையம் (DMC): 117(அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு) பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்) 1990 சுவ சேவா Ambulance சேவை: 1990(நோயாளிகளை…

புலத்கொஹுபிட்டிய பகுதியில் மண்சரிவு : 12 பேர் மாயம்

கேகாலை – புலத்கொஹுபிட்டிய – தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 12 பேர் காணாமல் போயுள்ளனர். பொலிஸார் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், கண்டி – ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன்,…

எச்சரிக்கை! ஒரு தசாப்தத்தில் கொழும்பு எதிர்கொள்ளும் மிக மோசமான வெள்ளப்பெருக்கு

களனி ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருவதால், இலங்கை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது 2016 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான வெள்ளத்தை விட மோசமான வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. நிலைமைகள் நீடித்தால், நாளை (29) இரவு…

அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை!

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் : திருகோணமலை – மட்டக்களப்பு ரயில் சேவைகள் பாதிப்பு

நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்கள் மூழ்கியுள்ளதால், இன்று திட்டமிடப்பட்டிருந்த ஆறு நீண்ட தூர நகரங்களுக்கு…

சீரற்ற காலநிலையால் இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை மீள நாடாத்தப்படும் திகதி அறிவிப்பு

மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்று (27) , நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பரீட்சையை அடுத்த மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில்…

மண்சரிவினால் கண்டி மாவட்டத்தில் மாயமான நால்வர்

சீரற்ற வானிலையால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவிலேயே இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா