Author: mithu mithu

சீரற்ற வானிலை அச்சுறுத்தல் :அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக இன்றும், நாளை வெள்ளிக்கிழமையும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பான பணிப்புரைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சுமாத்ரா கரையோரத்தில் நில அதிர்வு – இலங்கைக்கு அபாயமில்லை

இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா கரையோரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் கரையோரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. எனினும், இலங்கைக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை…

நாட்டின் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழப்பு எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. பதுளையில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சபரகமுவ மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை

சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியால் விசாரணையில் சிக்கினார் முன்னாள் எம்.பி

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார வைத்திருந்த துப்பாக்கியின் தன்மை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பேரணியின் போது, காவல்துறை குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.…

நிறுத்தமில்லா நகைச்சுவைக்கு தயாராகுங்கள்! – ‘ ஏமாளிகள் கோமாளிகள்’ வெப்சீரிஸ். அத்தியாயம் 03

Kesh Film Factory தயாரிப்பில் ‘எமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ் வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் — இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அத்தியாயங்கள்! இயக்குனர் முதல் முறையாக…

இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் உச்ச கட்ட வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 14.4 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் 6.0% நிலையான…

உயர்தர பரீட்சை வினாத்தாள் கசிவு தெடர்பில் விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (நவம்பர் 25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர்…

வெற்றி பெறுமா இலங்கைஅணி ? – நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.…

3,000,000 தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!

மனித பயன்பாட்டிற்காக ரூ. 360 மில்லியன் மதிப்புள்ள 3,000,000 செயலற்ற விசர் நாய்க்கடி தடுப்பூசிகளை (0.5 ml/1 ml) கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொள்முதல் செயல்முறைக்காகச் சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. இதற்காக 6 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத்…

இலங்கை சினிமா