Author: mithu mithu

சேருவில பிரதேச சபையின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

தேசிய மக்கள் சக்தியின் வசமுள்ள திருகோணமலை மாவட்டத்தின் சேருவில பிரதேச சபை தவிசாளர் எம்.ஜி.துஷார சம்பத்தினால் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (24) திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கப்பட்ட நிலையில் 4 மேலதிக வாக்குகளால் இன்று…

குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் நீண்ட கால தடுப்புக் காவலுக்கு : புதிய சட்டமூலம் தயார்

தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப்பத்திரங்களை சமர்பிக்கவும், நீண்ட காலம் தடுத்து வைப்பதற்குமான புதிய சட்டமூலத்தை சமர்பிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. அதன்படி புதிய சட்டமூலத்தை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக…

தாய்ப்பாலில் யுரேனியத்தின் செறிவு : ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன. 40 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளன.…

பசியால் வாடும் சூடான் மக்கள் : ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பலி

சூடானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போரால் இந்த நிலை உருவாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையே நீண்ட கால மோதல்…

திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான் : அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டின் திருப்பத்தூரை சேர்ந்த சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை ஜீவன் தொண்டமான் மணந்தார். குறித்த திருமண…

கடுகண்ணாவ உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்பாடு!

பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், கடுகண்ணாவ பிரதேசத்தில் நாளை (24) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காகச் விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான வீதி மூடப்பட்டிருப்பதால் மாற்று வழிகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், பரீட்சார்த்திகள் வழமையை விட முன்கூட்டியே தங்கள் பரீட்சை நிலையங்களுக்குச் சமுகமளிக்குமாறும்…

வளர்ப்பு நாயால் தாக்கப்பட்டட 2 வயது குழந்தை சடலமாக மீட்பு – பெற்றோர் கைது

அமெரிக்காவின் ஒக்லஹோமா பகுதியில் தமது குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நான்கு நாய்களில் ஒன்றினால் தாக்கப்பட்டதில் 2 வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒக்லஹோமா நகர பொலிஸ் திணைக்களத்துக்கு வந்த அழைப்புக்கமைய, சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளால், நாய் ஒன்றினால்…

வான்கதவுகள் திறப்பு : மக்கள் அவதானத்துடன் செயற்பட கோரிக்கை

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு…

நாணய சுழற்சியை வெற்றிபெற்ற இலங்கை – வியாஸ்காந்துக்கு கிடைத்த வாய்ப்பு!

பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.…

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா

தென் மாகாணம் காலி மாவட்டம் நாக்கியாதெனிய குரங்குமலை கீழ் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா பூஜைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம். பூஜைகள் ஆரம்பம்: 06 12 2025எண்ணெய் காப்பு : 07…

இலங்கை சினிமா