சாரதிகளுக்கு விசேட அறிவித்தல் : மூடப்பட்ட கடுகன்னாவ – மாவனெல்லை இடையான வீதி
கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
கண்டி வீதியிலுள்ள கீழ் கடுகன்னாவ மற்றும் மாவனெல்லை ஆகியவற்றுக்கு இடையேயான வீதி மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
கடுகண்ணாவ அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. ஏலவே இருவர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர்…
சிறிது காலமாக முட்டை திருட்டிய நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரிடமிருந்து 2,110 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3,120 திருடப்பட்ட முட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார்தெரிவித்தனர். முன்னதாக, வெலிவேரிய நகரில் உள்ள ஒரு முட்டை விற்பனை நிலையம்…
பேருந்துகளில் பயணிப்போருக்கு பயணச்சீட்டுக்களை விநியோகிக்காத நடத்துனர்களின் சேவை, 07 நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என மேல் மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட பேருந்தின் பயணத்தை…
கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில்…
பங்களாதேஷ் தலைநகர் அருகே இன்று காலை 5.7 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவிருந்த பங்களாதேஷ்-அயர்லாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டாக்காவிலிருந்து சுமார் 40…
வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கை, மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டத்தின்…
அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், சில ஊடக…
சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசர் பிரித்தி பத்மன் சுரசேன தலைமையிலான உயர் நீதிமன்றில் இந்தச் சத்தியப் பிரமாணம் இடம்பெற்றது.…
திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் இன்று காலை வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அவரது உடலம் பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல மருத்துவமனையிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.