Author: mithu mithu

மண்சரிவு எச்சரிக்கை அபாயம்-மக்களே அவதானம்!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள்…

இலங்கையின் வரி விதிப்பில் சமத்துவமின்மை

இலங்கையின் வரி விதிப்புக் கொள்கைகள் நாட்டின் சமூக சமத்துவமின்மையைத் தூண்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இந்த நிலைமை கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நீண்ட காலமாக…

மகளிர் உலகக் கிண்ணம் 2025- புள்ளிப்பட்டியலின் நிலை

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனையடுத்து குறித்த இரு அணிக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. மழையின் குறுக்கீடு இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது. இலங்கை…

கடும் மழை – அனர்த்த எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை…

போராட்டத்தை கைவிட்ட மின்சார சபை தொழிற்சங்கங்கள்

தாங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளன. தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எட்டப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும்…

வெளியாகியது பரீட்சை பெறுபேறுகள்! மாணவர்கள் சந்தோஷத்தில்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.