Author: priya priya punidha

டெஸ்லா ரோபோடெக்சி: ஆண்டிறுதிக்குள் பரவலான சேவை

டெஸ்லாவின் ரோபோடெக்சி (Robotaxi) சேவை ஏற்கனவே பல அமெரிக்க நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இச்சேவை பரவலாகக் கிடைக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஈலான் மஸ்க் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில்…

துப்பாக்கியோடு காரை விட்டு சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் கார் ஒன்றைக் கைவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் மற்றும் அவருக்கு உதவிய ஒருவரும் நேற்று (23) கைது…

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48…

தனிப்பட்ட தகராறில் ஒருவர் கொலை

எம்பிலிபிட்டிய, வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு முற்றியதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு…

அனிருத்தின் ஆட்டத்தில் அதிரப்போகும் உலகக்கிண்ணம் 

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி (ICC) ஆண்களுக்கான டி20 உலகக்கிண்ணத் தொடர் குறித்த விறுவிறுப்பான செய்தி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவிற்கான உத்தியோகபூர்வ உலகக்கிண்ணப் பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வெளியிடவுள்ளார். இளையதலைமுறையினர் மற்றும் கிரிக்கெட்…

தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு – 11 பேர் கைது

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது பெருமளவு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெங்களூரு வானூர்தி நிலையத்தில் சிக்கிய பிரித்தானிய இலங்கையர்

இந்தியாவின் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச வானூர்தி நிலையத்தில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த தனது நண்பரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த குற்றத்துக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குறித்த லண்டனை…

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒரு சந்தேகநபர் கைது

தெஹிவளையில் கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், நேற்று கொட்டாவ காவல்துறை பிரிவில்…

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பனிப்புயல் உறை பனியாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், அங்கு மின்சார விநியோகத் தடை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாகவும்…

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (24) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50…

இலங்கை சினிமா