Author: priya priya punidha

தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று

தேசிய கண் மருத்துவமனை மருத்துவர்களினால் இன்றைய தினம் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. தேசிய கண் மருத்துவமனையின் பதில் பணிப்பாளரின் தன்னிச்சையான இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம்…

98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அறிவிப்பு

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நடிகை டானியல் புரூக்ஸ் மற்றும் நடிகர் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட உள்ளனர். லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த…

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பம்

எதிர்வரும் 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.…

தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான வானிலை நாளை (23) முதல் மாற்றமடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வறட்சியான வானிலை தொடரும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள…

இந்தியாவிற்கு பயணமாகும் நாமல் உள்ளிட்ட குழுவினர்!

இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒடிஷா மாநிலத்திற்குப் பயணமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியக் குடியரசு…

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு போராட்டம்

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை ஆரம்பித்த பணிபுறக்கணிப்பு போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 7 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற…

அமெரிக்கா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு B1/B2 சுற்றுலா விசாவில் செல்லும் இலங்கையர்கள், அங்குள்ள சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B1/B2 விசாவானது வணிகக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் மட்டுமே…

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் உண்மையைக் கண்டறியும் குழுவினர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இதற்கமைய, இன்றைய தினம் நாட்மை வந்தடையும் சர்வதேச நாணய நிதியத்தின்…

கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தை முன்னிட்டு, கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து கண்காணிப்பு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, இன்றும், எதிர்வரும் 24 மற்றும் 27 ஆம் திகதிகளிலும், கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு அரங்கை அண்மித்த வீதிகளில் இந்த…

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம்

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் நியாயமற்றது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்ற…