Author: priya priya punidha

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (09) முற்பகல் 11.30 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து பரிந்துரைக்க புதிய நாடாளுமன்ற விசேட குழு நியமனம்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான தேர்தல் முறைமை எது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய நாடாளுமன்ற விசேட குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சபாநாயகரால் பெயரிடப்படும் ஒரு தலைவர் மற்றும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தக் குழு கொண்டிருக்கும்.இந்தக்…

குவைத் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கம்.

குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று, வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளது. விமானம் புறப்பட்டு 2 மணித்தியாலங்கள் 21 நிமிடங்களின் பின்னர்…

ஊழல் நிலக்கரி டெண்டர் தொடர்பாக எந்தவொரு ஊடகத்திலும் விவாதிக்கத் தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க சவால்.

ஊழல் நிறைந்த டெண்டர் ஊடாக தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்து நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் டெண்டர் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியுடன் எந்தவொரு…

மத்தேகொட பகுதியில் பாரிய தீ விபத்து: கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவு.

மத்தேகொட, கிரிகம்பமுனுவ பகுதியில் அமைந்துள்ள கைப்பை மற்றும் பணப்பை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17…

ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரம்: இணையம் துண்டிப்பு, அரச சொத்துக்கள் தீக்கிரை மற்றும் சர்வதேச எச்சரிக்கை.

ஈரானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில், அந்நாட்டு அதிகாரிகள் இணைய சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளனர்.நேற்று (08) இரவு போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், இஸ்ஃபஹான் நகரில் உள்ள அரச வானொலி மற்றும்…

இன்று மாலை இலங்கையை கடக்கிறது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 200 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று…

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிப்பு.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (09) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது.கல்வி மறுசீரமைப்புடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய 6-ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுப்பு (English Module) தொடர்பாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை…

குவைட் நாட்டு அதிகாரியின் பணத்தைத் திருடிய வாடகை கார் சாரதி கைது – திவுலபிட்டியவில் மீட்பு.

இலங்கைக்கு சுற்றுலா வந்த குவைட் நாட்டு ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் உடமைகள் அடங்கிய பையைத் திருடிய வாடகை கார் சாரதியை, சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு கோட்டை பொலிஸார் கைது…

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா.

இலங்கை விமானப்படையின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை (Search and Rescue) வலுப்படுத்துவதற்காக, 10 நவீன ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது ‘X’ தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான TH-57…

இலங்கை சினிமா