வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புத்தக வெளியீட்டு நிறுவனமாக திகழும் மணிமேகலை பிரசுரத்தின் 36 நூல்களின் வெளியீட்டு வைபவமும் புத்தக விற்பனை கண்காட்சியும் கடந்த வாரம் நடைபெற்றன.

பிரதம விருந்தினராக தென்னிந்திய சின்னத்திரை தொடர்களான மெட்டி ஒலி, நாதஸ்வரம் அத்தோடு பலரும் விரும்பி ரசித்த “எம்டன் மகன்” திரைப்பட புகழ் இயக்குனர் திருமுருகன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக காலை முரசு மாலை முரசு இணைய இதழ் ஆசிரியர் வித்தியாதரன், பூபாலசிங்கம் புத்தக நிறுவன அதிபர் ஸ்ரீதர் சிங் தமிழகத்திலிருந்து பேராசிரியர் கா.முருகேசன் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் இயக்குனர் ரவி தமிழ்வாணன் இந் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியதோடு வரவேற்புரையும் நிகழ்த்தினார்.

லங்கா காமராஜர் மெமோரியல் குளோபல் பவுண்டேஷனால் காமராஜர் வரலாறு என்ற நூலையும் குளோனிங் மற்றும் நானோ தொழில்நுட்ப அதிசயங்கள் என்ற நூலையும் நிகழ்வுக்கு வருகைத் தந்திருந்த வாசகர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி சிறப்பித்திருந்தனர்.

ஆக்கம் ஆ. இளங்கோ