Category: அரசியல்

கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக மாறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

இலங்கையில் (Srilanka) ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட துயரமும் தற்செயலானவை அல்ல என்றும் அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல்…

கம்மன்பில தாக்கல் செய்த மனு 24 ஆம் திகதி பரிசீலனைக்கு

ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்காக 24 ஆம் திகதி அழைக்க மேன்முறையீட்டு…

தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்கும் சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல்…

நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை,…

இந்தியா வரி விதித்து கொல்கிறது – டிரம்ப்

நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ரேடியோ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால்…

ராஜிதவுக்கும் நிமல் லன்சாவுக்கும் வீட்டு உணவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லன்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரினதும் முறையான கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர்…