Category: உள்ளூர் செய்திகள்

மழையின் தாக்கத்தால் – விவசாயிகள் பாதிப்பு!

நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், நுவரெலியா மாவட்டத்தில் இன்று மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் லீக்ஸ் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும், கரட்…

சட்டவிரோதமாக அரிசி இறக்குமதி செய்ததால் 15 பில்லியன் நட்டம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சட்ட விரோதமான முறையில் அரிசி இறக்குமதி செய்ததன் விளைவாக, இலங்கை சதொசவுக்கு ரூ.15,157,031,018 (15 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக COPE குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு துறையால் நடத்தப்பட்டு சட்ட…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கலந்துரையாடல், திகதி நிர்ணயிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சில் இன்று குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், பெருந்தோட்ட உரிமையாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமுகமளிக்காததால், கோரம் இன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், கலந்துரையாடல் எதுவும் இன்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக,…

தொடரும் மனித-யானை மோதல் : மின்சார வேலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாட்டில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக அதிகாரிகள் தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து வருவதாக சட்ட மாஅதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சட்டவிரோத மின்சார வேலிகளைக் கண்டறிந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு…

கட்டுநாயக்கவில் இருந்து பயணிக்கும் விமானங்களின் நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.…

இஷாரா செவ்வந்தி கூறிய திடுக்கிடும் தகவல்!

நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை இடம்பெற்ற பின்னர் இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் மித்தெனிய பகுதியிலுள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.…

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது!

அரசாங்க காணியின் ஒரு பகுதியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை இலஞ்சமாக கோரி பெற்றதற்காக விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் ஒருவர் நேற்று (16) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். மஹவ பகுதியைச் சேர்ந்த ஒருவர்…

நான்கு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள்…

மாணவர்களுக்கு பாராட்டு விழா – மலையக மக்கள் மன்றம் ஏற்பாடு

மலையக மக்கள் மன்றம் (Hill Country People’s Foundation) ஏற்பாடு செய்துள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா எதிர்வரும் அக்டோபர் 31ஆம் திகதி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு பாடசாலைகளில் நடைபெற உள்ளது. இவ்விழா காலை 9.00 மணிக்கு ஹொலிரூட்…

மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிட்டு வழங்க திட்டம்

தற்போது 300,000 க்கும் மேற்பட்ட சாரதி உரிமங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் அவற்றை அச்சிட்டு வழங்க எதிர்பார்க்கிறோம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில்…