Category: உள்ளூர் செய்திகள்

ஒரு இலட்சம் அபராதம் – குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றதால் வந்த விணை

ரூ.70 குடிநீர் போத்தலை ரூ.100க்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, குடுகல்வத்த பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் குடிநீர் போத்தலை அதிக விற்பனை செய்தமைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி நீதவான் நீதிமன்றம் இன்று (13)…

இன்று இருமுறை உயர்வடைந்த தங்கத்தின் விலை

இன்று (13) காலை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், பிற்பகலின் பின்பு 5,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் 2025ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியமைக்காக மூவருக்கும் நோபல்…

அழகாய் பூத்துக் குலுங்கும் பொன்னாவரை மலர்கள்

ஹட்டன், பொகவந்தலாவ பகுதியிலுள்ள உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் வீதியின் இருபுறங்களிலும் ‘பொன்னாவரை மலர்கள்’ பூத்து குலுங்குவதால் தேயிலைத் தோட்டம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நியவர்கள் நாட்டை ஆட்சி செய்யும் போது தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நிழல் தருவதற்காகவும் மண் அரிப்பைத் தடுக்கவும்…

மலையக மக்களை ஏமாற்றி உள்ளனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு

மலையகத்தில் இந்திய அரசின் நன்கொடையுடன் செயல்படுத்தப்படும் 10,000 தனி வீட்டுத் திட்டத்தில், மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நிகழ்வு “காணி” என்ற…

தீவிரமாக பரவும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் – மக்களே அவதானம்!

பரவத்தொடங்கியுள்ளதால்இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்…

திருத்தபடுமா மின்சார கட்டணம்!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர்…

இன்று முதல் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு

இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு ஆட்சேபணை தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்வான செய்தி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்! “இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். பதுளை, பண்டாரவளையில்…

சட்டத்திற்கு முரணாக இரத்தினக்கல் அகழ்வு- நால்வர் கைது

பலாங்கொடை பின்னவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளவ கங்கையில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதாகியவர்களிடம் இருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நால்வரும் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில்…