Category: உள்ளூர் செய்திகள்

புதிய சட்டம் அமுலாகிறது! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவுள்ளது. சிறுவர்களின் சிறுவர் பராயத்தை சீர்குலைக்கும் வகையில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் சிறுவர்கள், மன அழுத்தங்களுக்கு உள்ளான வீதம் குறைவாக இருந்ததாகவும் தற்போது சமூக ஊடக…

பன்றி காய்ச்சல் அபாயம் அதிகரிப்பு: அதி விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையின் பல பிரதேசங்களில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்…

வரலாற்றில் இடம்பிடித்த மட்டு வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை…

ஆறு நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 5,299 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு…

12 வருடங்களின் பின்னர் மலையகத்தில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி தேசியப் பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய மலர்களான நீலக்குறிஞ்சிப் பூக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நீலம், ஊதா,…

வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள்

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக…

வடக்கில் லஞ்சீட்டுக்கு பதிலாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற…

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர்…

பொலிஸாரை எதிர்த்து போராடும் வட மாகாண சட்டத்தரணிகள்

முறையான தேடுதல் உத்தரவு (Search Warrant) இன்றி, பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் அத்துமீறிச் செயற்பட்டதைக் கண்டித்து, வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப் புறக்கணிப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாத்தில் இடம்பெற்ற…

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதில் கவனம் செலுத்தும் அரசாங்கம்

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி இன்று நாடாளுமன்ற அமர்வின்போது…