Category: உள்ளூர் செய்திகள்

எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் பலியானோரின் சடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது உயிரிழந்தோரின் சடலங்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். எல்ல- வெல்லவாய பிரதான வீதியில் 24…

செம்மணி நினைவேந்தல் நிகழ்வு நாளை

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வொன்றை நாளைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கிருபாகரன், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…

இ.மி.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, பொறியியலாளர்கள் உட்பட மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். மறுசீரமைப்பு செயல்முறையைச் சீர்செய்து ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு,…

அகில இலங்கையில் யாழ் மாணவர் சாதனை

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று நடைபெற்ற விசேட ஊடக…

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன்…

ரணில் நன்றி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகங்களுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,…

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப்…

செம்மணியில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி உறுதி

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட…

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் கிடப்பில்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் தேங்கியிருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள்…

நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை

நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது முழு பெட்ரோலியத் தேவையையும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்…