ஒக்டோபர் 25 முதல் அமலுக்கு வந்த இந்த புதிய விதிமுறையின் படி, அந்தந்த துறைகளில் பட்டம், தொழில்முறை அனுமதி (license) அல்லது சான்றிதழ் போன்ற சான்றுகள் இல்லாமல் இத்தகைய தலைப்புகளில் பதிவுகள் இட முடியாது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் Cyberspace Administration of China (CAC) தெரிவித்ததாவது, இந்த விதி தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களை தவறான ஆலோசனைகளிலிருந்து பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி Douyin (சீனாவின் TikTok), Bilibili, Weibo போன்ற தளங்கள் இன்ஃப்ளூயன்சர்களின் தகுதிகளை சரிபார்க்கும் பொறுப்பு ஏற்க வேண்டியுள்ளது.
மேலும், பதிவுகளில் பயன்படுத்தப்படும் தகவல்கள் எந்த ஆய்வுகளில் இருந்து பெறப்பட்டவை என்பதை தெளிவாக குறிப்பிடவும், AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதையும் வெளிப்படையாக சொல்லவும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருந்துகள், சத்துணவு பொருட்கள் அல்லது ஆரோக்கியச் சப்ளிமென்ட்கள் தொடர்பான விளம்பரங்கள் கல்வி நோக்கில் காட்டப்படும் பெயரில் வெளியிடப்படுவதும் இனி தடை செய்யப்பட்டுள்ளது.