கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளிலும், சில நகர்ப் பகுதிகளிலும் இன்று 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை, நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரைப் பெறும் பிரதான நீர் பம்பிக்கு வழங்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடான நீர் விநியோகம் இன்று துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொடை, கோட்டே, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை, மஹரகம, மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.