அமெரிக்காவின் மாஸ் ஜெனரல் பிரிகாம் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், கர்ப்ப காலத்தில் கொவிட் தொற்று ஏற்பட்டால், குழந்தைகளுக்குப் பேச்சுத் தாமதம், ஓட்டிசம் (Autism) மற்றும் உடல் அசைவுக் கோளாறுகள் (Motor Disorders) ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்ற குழந்தைகளை விட 29 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோயெதிர்ப்புச் செயல்பாடு, கருவின் மூளை வளர்ச்சியைக் சீர்குலைப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் தொற்று ஏற்பட்டால் அதிக ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எனவே, கர்ப்பிணிப் பெண்கள் கொவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியம் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது