சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை மூன்று மாதங்களுக்குள் அமைச்சுகளுக்கு இடையேயான பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இதனிடையே, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தேசிய மையப் புள்ளியாக நியமிக்கப்பட்டுள்ளது.