தீபாவளியன்று “Gully” என்ற திரைப்பட தலைப்பில் தமிழ் பைலட் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள் தலைமையில் கொழும்பு சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குறிப்பாக இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் வைபவத்தில் சிரேஷ்ட கலைஞரும் கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் கலைஞர்கள் அமைப்பின் தலைவர் A. K. இளங்கோ பொருளாளரும் ஊடகவியாளருமான M. F. M நசாரும் கலந்து கொண்டிருந்தனர்.


இத்திரைப்படத்தை தென்னிந்திய திரைப்பட பிரபல இயக்குனரின் மகன் ஷர்வின் கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் பிரபல இளம் தொழிலதிபர் கெவின் ராகுல் தயாரிப்பாளராகவும் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

இத் திரைப்பட இயக்குனரின் அன்னையும் தென்னிந்திய சினிமாவின் நடிகையுமான மீரா சுரேஷ் திரைப்படத்துக்கான தலைப்பை உத்தியோக பூர்வமாக பதாதையில் திரை நீக்கம் செய்து
வெளியிட்டு வைத்தார். குறிப்பாக இப்படம் கிரிகெட் விளையாட்டையும் தெரு சண்டையையும் மையமாக வைத்தே உருவாகவுள்ளது.
முற்று முழுதாக
இலங்கை படைப்பாளிகளை வைத்து இலங்கையிலேயே
எதிர் வரும் மாதத்தில் படப்பிடிப்பை மேற் கொள்வதுவதுடன் குறுகிய காலத்தில் திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்..


ஆக்கம் A. K ELANGO
இலங்கை நிருபர்