வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index), கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் “Caution Level” எனப்படும் எச்சரிக்கை அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் தவிர்க்கப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நீர்ச்சத்துடன் இருத்தல், மெல்லிய ஆடைகளை அணிதல் மற்றும் நண்பகல் நேரங்களில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதைத் தவிர்த்தல் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.