மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் நேற்றைய நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில், இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளைப் படைத்து வெற்றி சதம் அடித்தார்.

இந்தப் போட்டியில், அவர், 95 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் (ODI)அவர் பெற்ற ஐந்தாவது சதம் இதுவாகும்.

அதன்படி, ஒரே ஆண்டில் மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற பட்டியலிலும் அவர் முன்னிலை வகிக்கிறார்.

இதேவேளை நேற்றைய போட்டியில் மந்தனாவுடன் இணைந்த தொடக்க வீராங்கனை பிரதிபா ராவல், 122 ஓட்டங்களை எடுத்து சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.